அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின் பெயரால்,

 

உறுப்பினர்கள் மற்றும் வாசக அன்பர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

 

தமிழ்முஸ்லிம் மன்றம் ஒரு கூட்டுப்பதிவாகும். இது எந்த இணையதளத்துக்கும், இயக்கத்துக்கும் கட்டுப்பட்டது கிடையாது.

 

தகவல் தொடர்பு நுட்பங்களில் தமிழுக்கென்று தனி இடத்தை தந்ததுதான் யுனிகோட். இதனைப் பயன்படுத்தி ஒரு மின்மன்றம் நிறுவவேண்டும் என்ற எண்ணத்தில் உதித்ததுதான் இந்த விவாத மன்றம். இது இலவச தளத்தில் நடத்தப்பட்டாலும் அதிக தொழில்நுட்பங்களைக் கொண்டது என்பதை நாம் அறிந்ததே.

 

முஸ்லிம்கள் தங்களுக்குள் செய்திகளை பகிர்ந்துக்கொள்ள வேண்டும், அழகான முறையில் விவாதிக்க தெரிந்திருக்க வேண்டும் மற்றும் எழுத்து, இணைய நுணுக்கங்களுக்கு ஒரு பட்டறை வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இம்மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்முஸ்லிம் மன்றம் தமிழ்மணம் மற்றும் தேன்கூடு போன்ற வலைப்பதிவு அரங்கங்களில் பதிவு செய்யப்படவில்லை. அத்தகைய அரங்கங்களில் இடப்பட்ட பதிவுகளை இம்மன்றத்தில் மீள்பதிவு செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கருத்துகளை யார்வேண்டுமானாலும் பதியலாம். ஆனால் தமிழ் யுனிகோடில் இருக்க வேண்டும். பிரச்னைக்குரிய மறுமொழிகள் என்று நிர்வாகம் கருதினால் அத்தகைய மறுமொழிகளை நிர்வாகம் அனுமதிக்காது.

1. விவாதத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தமிழ்முஸ்லிம் மன்றத்தின் நிர்வாகம் பொறுப்பாகாது. ஒவ்வொரு உறுப்பினரும் அவரின் கருத்துகளுக்கு பொறுப்பாவார்.

2. உறுப்பினர்களை நீக்குவதும் சேர்ப்பதும் நிர்வாகத்தின் தனிப்பட்ட உரிமை. அதற்கான காரணம் தேவைப்பாட்டால் சொல்வதோ அல்லது சூழ்நிலை கருதி மறைக்கவோ நிர்வாகத்திற்கு முழு உரிமை உண்டு.

3. (நிர்வாகம் எதனை சர்ச்சை என்று விளங்குகிறதோ அத்தகைய) சர்ச்சைக்குறிய பதிவுகள், மறுமொழிகள் தேவைப்பட்டால் திருத்தம் செய்ய நிர்வாகத்திற்கு முழு உரிமையும் உண்டு. அதற்கு மறுத்தால் குறிப்பிட்ட பதிவு நீக்கப்படும். உறுப்பினர் வசதியும் துண்டிக்கப்படலாம்.

4. ஆரோக்கியமான முறையில், நிதானமாக சுட்டிக்காட்டி அழகான முறையில் விவாதம் செய்யவேண்டும் என்று நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது. விமர்சனங்கள் கண்ணியமான முறையில் இருக்க வேண்டும். மீறப்படும் பதிவுகள் தனியாகவோ, மறுமொழி வாயிலாகவோ சுட்டிக்காட்டப்படும். திருத்திக் கொள்ளவில்லையென்றால் நீக்கப்படுவார்கள்.

5. இம்மன்றத்தில் உறுப்பினராக உள்ளவர், இம்மன்றம் தொடர்பாக வேறு இடத்தில் போய் தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டாலோ, இம்மன்றத்திற்கு வெவ்வேறு வகையில் தொந்தரவு கொடுத்தாலோ உறுப்பினர் வசதி துண்டிக்கப்படும்.

6. இயக்கம் சார்ந்தவர் உறுப்பினராக அனுமதிக்கப்பட மாட்டார். இயக்கங்களில் உறுப்பினராக உள்ளவர்கள் இம்மன்றத்தில் உறுப்பினராக இருப்பது தெரியவந்தால், உறுப்பினர் வசதி துண்டிக்கப்படும். அத்தகையவர்கள், இயக்கம் பற்றி எழுதினாலும் எழுதாவிட்டாலும் இந்த முறை கையாளப்படும்.

7. உறுப்பினர்கள் இயக்கங்களை, அமைப்புகளை கண்ணியமாக விமர்ச்சிப்பதை நிர்வாகம் எந்த தடையும் விதிக்கவில்லை. இதன் காரணமாக இம்மன்றம் நோக்கி எறியப்படும் சொல் அம்புகளை தாங்கும் சக்தியை, உறுப்பினர்கள் வளர்த்துக் கொள்வது நல்லது.

8. ஒரு வருட காலம் எந்த பதிவையும் தராத உறுப்பினர்கள் எந்த அறிவிப்பும் செய்யப்படாமல் நீக்கப்படுவார். புதிதாக இணைந்த உறுப்பினர், ஒரு வாரத்திற்குள் எந்த பதிவையும் கொடுக்கவில்லையென்றால், உறுப்பினர் வசதி துண்டிக்கப்பட வாய்ப்பு உண்டு.

9. உறுப்பினர்கள் யுனிகோடில் தட்டச்சு செய்யவோ அல்லது எழுத்துரு மாற்றியின் மூலம் யுனிகோடாக மாற்றத் தெரிந்திருக்க வேண்டும்.

10. உறுப்பினர்களின் மறுமொழிகள் மட்டுறுத்தலுக்கு உட்படுத்தப்பட மாட்டாது.

11. நிர்வாகத்திற்கு மட்டும் செய்தி தெரிவிக்க விரும்புகிறவர்கள் tamilmuslim(at)gmail(dot)com என்ற முகவரிக்கு மடலிடவும்.

12. ஆங்கில மொழியில் இடப்பட்டு மறுமொழிகள், அனுமதிக்கப்படாமல் போகலாம்.

13. சம்பந்தப்பட்ட பதிவுகளில் மறுமொழியிடுவதற்கு பதிலாக, வேறு பதிவில் இடப்பட்ட மறுமொழிகள் அனுமதிக்கப்படாமல் போகலாம்.

14. அரசியல், இயக்கம் தவிர மற்ற எந்த ஒரு விஷயத்திற்கும் தனி நபரை விமர்ச்சிப்பதை நிர்வாகம் தடை செய்கிறது. அப்படி இனி பதியப்பட்டால் அவை நீக்கப்படும் என்பதையும், தொடர்ந்து செய்தால் உறுப்பினர் வசதி துண்டிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இதில் யாரும் விதிவிலக்கல்ல.

15. விவாதங்கள் தவிர்த்து செய்திகள், பொதுவான கருத்துகள், சிந்தனைகள், கதைகள் போன்றவற்றையும் இம்மன்றத்தில் பதியலாம்.

16. சர்ச்சைக்குறிய விஷயங்கள் என்று நிர்வாகம் எதனை முடிவெடுக்கிறதோ, அவ்விஷயம் தொடர்பாக இடப்படும் பதிவுகள் மற்றும் மறுமொழிகளில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று விரும்பும் உறுப்பினர்கள், தங்களின் பதிவுகள் மற்றும் மறுமொழிகளுக்கு கீழே அவர்களின் சொந்தப் பெயர், வசிக்கும் ஊர் அல்லது நகரம், மொபைல் தொலைபேசி எண் போன்றவற்றை குறிப்பிட வேண்டும். இந்த அனுமதியை பிரச்னைகள் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திலோ அல்லது இடப்படும் சொந்தப் பெயர், வசிக்கும் ஊர் அல்லது நகரம், மொபைல் தொலைபேசி எண் போன்றவற்றில் உண்மை இல்லை என்று நிர்வாகம் உணர்ந்தாலோ இந்த அனுமதியும் அக்குறிப்பிட்ட உறுப்பினருக்கு மறுக்கப்படும். சர்ச்சைக்குறிய விஷயங்கள் எது எது என்று நிர்வாகம் பட்டியல் தராவிட்டாலும், அத்தகைய விஷயங்களை பார்க்கும்போது நிர்வாகம் அறிவிக்கும். அதே நேரத்தில் எதற்காக சர்ச்சைக்குறிய விஷயத்தில் சேர்க்கப்பட்டது என்றெல்லாம் நிர்வாகம் காரணங்கள் தராது. கருத்து சுதந்திரத்தை மேற்கோள் காட்டி, நிர்வாகத்தை குறை கூறுபவராக இருந்தால், மேற்கண்டபடி தங்களின் கருத்துகளை பதியலாம். (உறுப்பினர் அல்லாதவர்கள் பதியும் மறுமொழிகளுக்கும் இந்த விதி பொருந்தும்)

மேற்கண்டவாறு பல முன்னெச்சரிக்கை விதிகள் போடப்பட்டாலும், நிர்வாகம் சுமூகமான முறையில் உறுப்பினர்களை அனுசரிக்க விரும்புகிறது. எனவே உறுப்பினர்களும், மறுமொழி இடுபவர்களும் விதிகளை அனுசரித்து செல்லவேண்டும் என்று நிர்வாகம் பணிவுடன் கேட்டுக்கொள்கிறது.

புதிதாக சேர விருப்பம் உள்ளவர்கள், மேற்கண்டவைகளுக்கு உடன்பட்டால் தங்களின் எழுத்து அனுபவங்கள் மற்றும் விபரங்களுடன் tamilmuslim(at)gmail(dot)com என்ற முகவரிக்கு தமிழ் யுனிகோடில் மடலிடவும். நிர்வாகம் உறுப்பினராக சேர்க்க விரும்பினால் மட்டுமே மின்னஞ்சல் வழியே அழைப்பு அனுப்பப்படும். அவ்வழைப்பு மின்னஞ்சலில் வந்த சுட்டியை சொடுக்குவதன் மூலம் இம்மன்றத்துடன் இணைந்துக்கொள்ள முடியும். ஏற்கனவே பிளாக்கரில் உறுப்பினராக இருந்தால் அதன் Username மற்றும் Password ஆகியவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம்.

பதிவு செய்வது எப்படி?

உங்களுடைய பிளாக்கர் கணக்கில் உள்நுழைந்தபின்னர் முஸ்லிம் விவாத அரங்குக்கான வழி இணைக்கப்பட்டிருக்கும். உறுப்பினர்கள் இதன் வழியே புதிய பதிவுகளை இடவும் (அவரின்) பழைய பதிவுகளை திருத்தம் செய்யவும் முடியும். (உதவிக்கு இங்கு சொடுக்கவும்)

உறுப்பினர் அல்லாதவர்கள்:

உறுப்பினர் அல்லாதவர்கள் தங்களின் கருத்துகளை மறுமொழியாக பதியலாம். மறுமொழிகள் மட்டுறுத்தலுக்கு (moderation) உட்படுத்தி நிர்வாகம் விரும்பினால் மட்டுமே அனுமதிக்கும். அதற்கான காரணங்களை தெரிவிப்பதோ, மறைப்பதோ நிர்வாகத்திற்கு முழு உரிமை உண்டு.

உறுப்பினர் அல்லாதவர்கள் (இயக்கம் சார்ந்தவர்கள் உட்பட) தங்களின் ஆக்கங்களை tamilmuslim(at)gmail(dot)com என்ற முகவரிக்கு அனுப்பி வைத்தால், அதனை கடிதம் பகுதியில் இணைக்க தகுதியானது என்று நிர்வாகம் கருதினால் மன்றத்தில் பதியப்படும்.

குறிப்பு:

மனிதன் என்ற விதத்தில் மேற்கண்ட விஷயங்களை அமுல்படுத்தவதில் தவறுகள் நேரலாம். எனவே அதனை எனது கவனத்திற்கு கொண்டுவந்தால் நன்றியுடன் இருப்பேன். அதனை தவிர்த்து மன்ற நிர்வாகத்தினை கிண்டல், கேளி செய்தால், அப்பதிவர்களின் கருத்துகள் எதிர்காலத்தில் அனுமதிக்கப்படாமல் போவதற்கு வாய்ப்புண்டு.

புதுப்பித்த தேதி: ஆகஸ்ட் 4, 2006  -  Local Saudi Time 3.26 P.M.